கிணத்து ஸ்விம்மிங் பூல்" – சம்மர்ல செம்ம காசு பாக்குற லோக்கல் பிசினஸ்!
இப்போ திருப்பூர், கோவை சைடுல எல்லாம் தோட்டம், விவசாய கிணறு வச்சிருக்கவங்க செம்மையா ஒரு லோக்கல் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க ப்ரோ. கிணத்து தண்ணிய வச்சு சின்னதா ஒரு 'நேச்சுரல் ஸ்விம்மிங் பூல்' மாதிரி செட் பண்ணி, ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய், 100 ரூபாய்னு பசங்களுக்கு வாடகைக்கு விட ஆரம்பிச்சுட்டாங்க. இன்னைக்கு இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணாலே, பசங்க எல்லாரும் கார்லயோ பைக்லயோ சும்மா குரூப்பா கிளம்பி, இந்த மாதிரி கிராமத்து சைடு இருக்குற தோப்புக்குள்ள போய் கிணத்துல குதிச்சு டைவ் அடிக்கிற ரீல்ஸ் தான் அல்காரிதம் முழுக்க ஓடிட்டு இருக்கு. வெயிலுக்கும் ஆச்சு, பிரெண்ட்ஸோட ஜாலி ட்ரிப் மாதிரி பட்ஜெட்லயும் முடிஞ்சிருச்சுன்னு பசங்க இத செம்மையா ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.
Comments
Post a Comment